பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டு இடைவெளியில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை பாபர் அசாம் கேப்டனாக வழிநடத்தினார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் விலகினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை பாபர் அசாம் கேப்டனாக வழிநடத்தினார். அந்த தொடருக்குப் பிறகு டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பினால் அணியின் நலனுக்காக மீண்டும் கேப்டனாக செயல்படுவேன் என பாபர் அசாம் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படாதது தற்போது உள்ள பிரச்னை கிடையாது. பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டிக்கு கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படும் சூழல் உருவானால், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நலனுக்காக அணியின் கேப்டனாக செயல்படுவேன் என்றார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் ஸல்மி அணியை பாபர் அசாம் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான பெஷாவர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப்போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் ஸல்மி அணி, மார்னஸ் லபுஷேன் தலைமையிலான ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Summary
Expectation has arisen as to whether Babar Azam will be reappointed as the captain of the Pakistan team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 கோடி பேர் காப்பாற்றப்பட்டனர்: டிரம்ப்

பாபர் அசாம் 2ஆவது சதம்: 5ஆவது முறையாக பிஎஸ்எல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெஷாவர்!

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பாபர் அசாம்..! கெயில், விராட் கோலி சாதனை முறியடிப்பு!

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

