பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் பாபர் அசாமின் பெஷாவர் ஜல்மி அணி ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
பிஎஸ்எல் குவாலிஃபயர் போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் டாஸ் வென்று பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஜல்மி 20 ஓவர்களில் 221/7 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் பெஷாவர் ஜல்மி அணியின் கேப்டன் பாபர் அசாம் 103 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் 18.4 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த சீசனில் இது அவருக்கு இரண்டாவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலமாக பெஷாவர் ஜல்மி அணி ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி, அதிகமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, லாகூர் கலந்தர்ஸ், முல்தான் சுல்தான்ஸ், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் நான்கு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.
Summary
Babar Azam second century and his Peshawar Zalmi team qualify to Final in PSL
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

44 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்டன் வில்லா!

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?

0-2லிருந்து 3-2 த்ரில் வெற்றி: இத்தாலி கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இன்டர் மிலன்!

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பாபர் அசாம்..! கெயில், விராட் கோலி சாதனை முறியடிப்பு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

