தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

0-2லிருந்து 3-2 த்ரில் வெற்றி: இத்தாலி கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இன்டர் மிலன்!

இத்தாலி கோப்பை அரையிறுதிப் போட்டியில் வென்ற இன்டர் மிலன் குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் இன்டர் மிலன் அணியினர். - படம்: எக்ஸ் / இன்டர்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:56 pm IST

இத்தாலியில் நடைபெறும் இத்தாலி கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் இன்டர் மிலன் அணி 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கோமோ 1907 அணியை வீழ்த்தியது.

முதல்கட்ட அரையிறுதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தது. இரண்டாம் கட்ட ஆட்டத்தில் 3-2 என வென்று, இன்டர் மிலன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இத்தாலியன் கால்பந்து லீக் சீரி ஏவில் முதலிடத்தில் இருக்கும் இன்டர் மிலன் அணி தனது 10ஆவது இத்தாலி கோப்பையை வெல்லும் முனைப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டியில் முதல் பாதியில் கோமா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் 48ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-0 என முன்னிலை வகித்தது.

பின்னர், மீண்டெழுந்த இன்டர் மிலன் 69, 86ஆவது நிமிஷத்தில் சாலனல்லோ அசத்தால் 2-2 என சமன்படுத்தப்பட்டது. பின்னர், சப்ஸ்ட்யூட்டாக வந்த இன்டர் மிலனின் பீடர் 89ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 3- 2 என்ற த்ரில் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டி மே13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மற்றுமொரு அரையிறுதியில் அட்லென்டாவும் லாசியோவும் 2-2 என சமநிலையில் இருக்கின்றன. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் உடன் மோதவிருக்கிறது

Summary

Inter Milan comes back from 2 goals down to beat Como and reach Italian Cup final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.