மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

News image

வங்கதேச அணி வீரர்கள் - படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :27 ஏப்ரல் 2026, 7:40 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டி20 போட்டி சட்டோகிராமில் இன்று (ஏப்ரல் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக டேன் கிலீவர் மற்றும் கிளார்க் தலா 51 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் நிக் கெல்லி 39 ரன்களும், ஜோஷ் கிளார்க்சன் 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மெஹிதி ஹாசன், தன்சிம் ஹாசன் ஷாகிப் மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 18 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

வங்கதேச அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தௌகித் ஹிரிடாய் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷமிம் ஹொசைன் அதிரடியாக 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். பர்வேஷ் ஹொசைன் எமோன் 28 ரன்கள், லிட்டன் தாஸ் 21 ரன்கள், தன்சித் ஹாசன் தமிம் 20 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் ஈஷ் சோதி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஷ் கிளார்க்சன் மற்றும் நாதன் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

Bangladesh has won the first T20 match against New Zealand by 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.