தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்; சமனில் ஒருநாள் தொடர்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியைக் கொண்டாடும் வங்கதேச வீரர்கள் - படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :20 ஏப்ரல் 2026, 7:49 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம் - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஏப்ரல் 20) டாக்காவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய அந்த அணி, 48.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக நிக் கெல்லி அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 102 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, முகமது அப்பாஸ் 19 ரன்கள், நாதன் ஸ்மித் 18 ரன்கள், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 15 ரன்கள், ஹென்ரி நிக்கோல்ஸ் 13 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நஹித் ராணா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷோரிஃபுல் இஸ்லாம் இரண்டு விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது, சௌமியா சர்க்கார் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தன்சித் ஹாசன், நஜ்முல் ஷாண்டோ அரைசதம்; சமனில் ஒருநாள் தொடர்!

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், 35.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

வங்கதேச அணியில் சிறப்பாக விளையாடிய தன்சித் ஹாசன் தமிம் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அரைசதம் விளாசி அசத்தினர். தன்சித் ஹாசன் 58 பந்துகளில் 76 ரன்களும் (10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 71 பந்துகளில் 50 ரன்களும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, தௌஹித் ஹிரிடாய் 30 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் ஜேடன் லென்னாக்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நஹித் ராணாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேசம் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Bangladesh won the second ODI against New Zealand by 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.