ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
நேற்றையப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தும் அந்த அணியால் பெரிய அளவில் இலக்கு நிர்ணயிக்க முடியவில்லை.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ரன்கள் குவிக்கத் தவறி வருகிறார். இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், வெறும் 61 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நேற்றைய ஆட்டத்திலும் அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னைப் பொருத்தவரை ரியான் பராக்கிற்கு சரியான நேரம் அமையவில்லை. எல்லா போட்டிகளிலும் எல்லோரும் ரன்கள் குவிக்க முடியாது. அணியில் சில வீரர்கள் ஃபார்மில் இருப்பார்கள், சிலர் ஃபார்மில் இருக்க மாட்டார்கள். ரியான் பராக் மீண்டு வருவார் என்பதில் எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் கண்டிப்பாக ஃபார்முக்குத் திரும்பி சில போட்டிகளை அணிக்காக வென்று கொடுப்பார்.
ரியான் பராக் மிகவும் நன்றாக விளையாடக் கூடிய திறன் மிகுந்த வீரர். அவருடைய விளையாட்டில் எந்த ஒரு தவறும் இல்லை. காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், ஐபிஎல் தொடருக்கு முன்பாக குறைந்த அளவிலேயே கிரிக்கெட் விளையாடினார். மேலும், ஐபிஎல் மிகவும் கடினமான தொடர். ஐபிஎல் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்கப் போவதில்லை. ரியான் பராக் நன்றாக பயிற்சியில் ஈடுபடுகிறார். அவரது சிறப்பான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Rajasthan Royals' batting coach Vikram Rathour has stated that there is no doubt whatsoever that the team's captain, Riyan Parag, will return to form.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் பற்றி கவலையில்லை: ரியான் பராக்
ஐபிஎல் 2026: ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்!

ரியான் பராக்கின் பேட்டிங்கில் தவறில்லை, வலுவாக மீண்டு வருவார்: விக்ரம் ரத்தோர்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


