தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ரியான் பராக்கின் பேட்டிங்கில் தவறில்லை, வலுவாக மீண்டு வருவார்: விக்ரம் ரத்தோர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கின் பேட்டிங்கில் எந்தவொரு தவறும் இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

News image

ரியான் பராக் - படம் | AP

Updated On :26 ஏப்ரல் 2026, 5:14 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கின் பேட்டிங்கில் எந்தவொரு தவறும் இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் ஏழு போட்டிகளில் விளையாடியுள்ளன. சில அணிகள் எட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ளன. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருந்தாலும், அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக், வெறும் 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கின் பேட்டிங்கில் எந்தவொரு தவறும் இல்லை எனவும், அவர் வலுவாக மீண்டு வருவார் எனவும் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரியான் பராக்கின் பேட்டிங்கில் எந்தவொரு தவறும் இல்லை. வலைப்பயிற்சியில் அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். சில நேரங்களில் வீரர்கள் இதுபோன்ற காலக் கட்டத்தை கடந்து வர வேண்டியிருக்கும். கிரிக்கெட்டில் இது இயல்பான ஒன்றுதான் என நினைக்கிறேன். ரியான் பராக் வலுவாக மீண்டு வருவார். அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

Summary

Rajasthan Royals batting coach Vikram Rathour has stated that there are no flaws in captain Riyan Parag's batting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.