ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி மிகப் பெரிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் 11 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற மிகப் பெரிய சாதனையை விராட் கோலி படைப்பார். ஐபிஎல் தொடரில் இதுவரை 274 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 8989 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 39.95 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 133.76 ஆகவும் உள்ளது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி 8 சதங்கள் மற்றும் 66 அரைசதங்கள் விளாசியுள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 113* ஆக உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 328 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் குவித்துள்ளவர்கள் வரிசையில் அவர் 6-வது இடத்தில் உள்ளார். அவரது சராசரி 54.66 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 162.18 ஆகவும் உள்ளது. அவர் மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 81 ஆக உள்ளது.
Summary
In the IPL tournament, Royal Challengers Bangalore player Virat Kohli is moving towards a massive record.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விராட் கோலி அறிவுரையின்படியே அவரை வீழ்த்திய பிரின்ஸ் யாதவ்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!
ஆரஞ்ச் கேப் வென்ற விராட் கோலி..! புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


