ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் மிகவும் குறைவான ரன்கள் எடுத்து தில்லி கேபிடல்ஸ் மோசமான சாதனையை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடி வருகிறது.
பவர்பிளேவில் 13 ரன்கள்; தில்லி கேபிடல்ஸ் மோசமான சாதனை!
ராயல் சேலஸ்ஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இருவரும் பவர்பிளேவில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி தில்லி கேபிடல்ஸை திணறடித்தனர்.
புவனேஷ்குமார் மற்றும் ஹேசில்வுட்டின் அபார பந்துவீச்சால் தில்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்பிளேவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
தில்லி கேபிடல்ஸ் அணியில் சஹில் பராக் (0 ரன்), கே.எல்.ராகுல் (ஒரு ரன்), நிதீஷ் ராணா (ஒரு ரன்), சமீர் ரிஸ்வி (0 ரன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (5 ரன்கள்), அக்ஷர் படேல் (0 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களில் வெறும் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 3 ஓவர்களில் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் குவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர்கள்
13/6 - தில்லி கேபிடல்ஸ் (ஆர்சிபிக்கு எதிராக, 2026)
14/2 - ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்சிபிக்கு எதிராக, 2009)
14/3 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக, 2022)
15/2 - சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தாவுக்கு எதிராக, 2011)
16/1 - சென்னை சூப்பர் கிங்ஸ் (தில்லி டேர்டெவில்ஸுக்கு எதிராக, 2015)
16/1 - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஆர்சிபிக்கு எதிராக, 2019)
Summary
Delhi Capitals has set an unwanted record in the history of the IPL by scoring the lowest number of runs in the Powerplay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பதும் நிசங்கா அரைசதம்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 143 ரன்கள் இலக்கு!

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... கே.எல். ராகுல் நிகழ்த்திய புதிய சாதனை!

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


