நடப்பு ஐபிஎல் சீசனில் 35ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 264/2 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த அணியாக தில்லி கேபிடல்ஸ் சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 67 பந்துகளில் 152* ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் அடித்தார்.
தில்லி அணி தனது சொந்த திடலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பதும் நிசாங்கா 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து கே.எல். ராகுல் - நிதீஷ் ராணா இணையினர் 220 ரன்கள் குவித்தார்கள்.
இந்தப் போட்டியில் நிதீஷ் ராணா 91 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறத்தில் கே.எல். ராகுல் ருத்ரதாண்டவம் ஆடி 152 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி வீரர்களின் பந்துவீச்சை ராகுல் நான்கு பக்கமும் அடித்து நொறுக்கினார்.
பஞ்சாப் அணியின் சார்பில் அர்ஷ்தீப், பார்ட்லெட் தலா 1 விக்கெட் எடுத்தார்கள். சஹால் மட்டுமே 10.5 ரன்ரேட்டில் பந்துவீசினார். மற்றவர்கள் எல்லாம் 11, 12, 16 என ரன் ரேட்டில் பந்துவீசி அதிர்ச்சி அளித்தார்கள்.
Summary
K.L. Rahul 152: Delhi Capitals sets a target of 265 runs for Punjab Kings
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழக்கும் தில்லி!

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... கே.எல். ராகுல் நிகழ்த்திய புதிய சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

