நடப்பு ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸ் அணியின் தொடர்ச்சியான தோல்விகளால் பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடந்த 51ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி 20 ஓவர்களில் 142/8 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 14.2 147/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா வீரர் ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலமாக கொல்கத்தா புள்ளிப் பட்டியலில் முன்னேற, தில்லி அணி கீழிறங்கியது.
இதுவரை 11 போட்டிகளில் நான்கில் வென்றுள்ள தில்லி அணி ஏழு போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. மீதமுள்ள மூன்றில் வென்றாலும் 14 புள்ளிகள்தான் வரும். இதில் தேர்வாக மற்ற அணிகளின் தோல்விகள், ரன் ரேட் என பல காரணிகள் இருக்கின்றன.
இந்தத் தோல்வியுடன் தில்லி அணி கிட்டதட்ட பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்தது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்த அணி குஜராத்திடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
அந்தத் தோல்விக்குப் பிறகு அந்த அணியினால் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவிக்க முடியாமல் சென்றது. பிளேயிங் லெவனில் மாற்றம் அணியின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் தோல்விகளை மட்டுமே சந்தித்த கொல்கத்தா அணிக்கு பிளே ஆஃப்ஸ் வாய்ப்பு அதிகரித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
Summary
Delhi Capitals Loses Playoff Hopes Due to Consecutive Defeats!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

