இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் கே.எல். ராகுல் அதிக ரன்கள் குவித்தவராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மூன்றாவது அதிகபட்ச ரன்கள் குவித்தவராகவும் 150+ அடித்த முதல் இந்தியராகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 264/2 ரன்கள் குவித்தது.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 67 பந்துகளில் 152* ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் அடித்தார்.
இந்திய ஆடவர்களில் உள்ளூர், சர்வதேச, ஐபிஎல் போட்டிகள் என அனைத்திலும் சேர்த்து கே.எல். ராகுல் அதிகபட்ச ரன்களை அடித்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர்கள்
1. கே.எல். ராகுல் - 152* ரன்கள் (2026)
2. திலக் வர்மா - 151 ரன்கள் (2024)
3. அபிஷேக் சர்மா - 148 ரன்கள் (2025)
4. ஸ்ரேயாஷ் ஐயர் - 147 ரன்கள் (2019)
5. புனித் பிஷத் - 146* ரன்கள் (2021)
ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன்கள் குவித்தவர்கள்
1. கிறிஸ் கெய்ல் - 175* ரன்கள் (2013)
2. பிரெண்டன் மெக்கல்லம் - 158* ரன்கள் (2008)
3. கே.எல். ராகுல் - 152* ரன்கள் (2026)
4. அபிஷேக் சர்மா - 141 ரன்கள் (2025)
5. குயிண்டன் டி காக் - 140* ரன்கள் (2022)
Summary
KL Rahul becomes Top of Highest individual scores by an Indian in Men’s T20s
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக... விராட் கோலி அதிரடி சாதனை!

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

