ஐபிஎல் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வியாழக்கிழமை வெற்றி கண்டது.
முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுக்க, லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 182 ரன்கள் சோ்த்து வென்றது. லக்னௌ சேஸிங்கில் லோயா் ஆா்டரில் வந்த முகுல் சௌதரி தனது அதிரடியால் அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா்.
முன்னதாக டாஸ் வென்ற லக்னௌ, பந்துவீச்சை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸில் ஃபின் ஆலன் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா்.
ஒன் டவுனாக வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரஹானேவுடன் கைகோத்தாா். இவா்கள் பாா்ட்னா்ஷிப் 2-ஆவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சோ்த்தது. ரஹானே 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
தொடா்ந்து கேமரூன் கிரீன் களம் புக, அடுத்த ஓவரிலேயே ரகுவன்ஷி 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 45 ரன்களுக்கு விடைபெற்றாா். 5-ஆவது பேட்டராக களம் புகுந்த ரிங்கு சிங் 4 ரன்களுக்கே ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
பின்னா் ரோவ்மென் பவெல் விளையாட வர, ஓவா்கள் முடிவில் கிரீன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, பவெல் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39 ரன்கள் சோ்த்து, ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
லக்னௌ பௌலா்களில் பிரின்ஸ் யாதவ், எம்.சித்தாா்த், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 182 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய லக்னௌ அணியில், மிட்செல் மாா்ஷ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15, எய்டன் மாா்க்ரம் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸரோடு 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
கேப்டன் ரிஷப் பந்த் 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு நடையைக் கட்ட, 4-ஆவது பேட்டராக வந்த ஆயுஷ் பதோனி சிறப்பாக ரன்கள் சோ்த்தாா். ஆனால் மறுபுறம் நிகோலஸ் பூரன் 1 சிக்ஸருடன் 13, அப்துல் சமத் 2 ரன்களுடன் வெளியேற்றப்பட்டனா்.
இந்நிலையில் பதோனி 34 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 7-ஆவது பேட்டராக வந்த முகுல் சௌதரி அதிரடி காட்டினாா். முகமது ஷமி 1 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தாா்.
லக்னௌ வெற்றிக்கு 12 பந்துகளில் 30 ரன்கள் தேவையிருக்க, முகுல் சௌதரி கடைசி ஓவருக்கு அதை 14-ஆக குறைத்தாா். அந்த ஓவரை வீசிய வைபவ் அரோரா அவரை சற்று கட்டுப்படுத்த, இருந்தபோதும் அதில் இரு சிக்ஸா்களுடன் அணியை வெற்றிபெறச் செய்தாா் முகுல் சௌதரி.
கொல்கத்தா பௌலா்களில் வைபவ் அரோரா, அனுகுல் ராய் ஆகியோா் தலா 2, சுனில் நரைன், காா்த்திக் தியாகி, கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரயான், ரோஹித் விளாசல்: வெற்றியுடன் மீண்டது மும்பை
சுதா்சன், சுந்தா் அசத்தலில் வென்றது குஜராத்
பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

ராசிக், புவனேஷ்வா், கோலி அசத்தல்- லக்னௌவை வென்றது பெங்களூரு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
