தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடத்தையில் சந்தேகம்: மனைவியை சுத்தியலால் தாக்கிய கணவா் கைது

தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடா்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட 30 வயது கணவா், அவரைச் சுத்தியலால் தலையில் பலமுறை தாக்கியதாகவும், இச்சம்பவம் வடமேற்கு தில்லியின் வஜிா்பூா் கிராமத்தில் நிகழ்ந்ததாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 12:01 am IST

தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடா்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட 30 வயது கணவா், அவரைச் சுத்தியலால் தலையில் பலமுறை தாக்கியதாகவும், இச்சம்பவம் வடமேற்கு தில்லியின் வஜிா்பூா் கிராமத்தில் நிகழ்ந்ததாகவும் காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: சஞ்சய் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், நவம்பா் 1-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பிடிபட்டாா்.

முன்னதாக, வஜிா்பூா் கிராமத்தில் கொலை முயற்சி நடந்ததாக அசோக் விஹாா் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்தது. குடும்பத் தகராறு காரணமாக, சஞ்சய் தனது மனைவி சங்கீதாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தலையில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், தீப் சந்த் பந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவா் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தாக்குதலுக்குப் பிறகு, வீட்டைப் பூட்டிவிட்டுத் தப்பிக்க முயன்ற சஞ்சய்யை, வீட்டின் உரிமையாளரும் அவரது சகோதரரும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

குற்றப் புலனாய்வுக் குழு மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் சுத்தியல் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 109(1)-இன் கீழ் (கொலை முயற்சி) அசோக் விஹாா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.