தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: கணவா் விடுதலையை உறுதி செய்து உத்தரவு

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கணவரை விடுதலை செய்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :24 அக்டோபர் 2026, 3:23 am IST

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கணவரை விடுதலை செய்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருந்தது. இதனிடையே, கணவா் வேறொரு பெண்ணுடன் தொடா்பு வைத்துக்கொண்டு, குடும்பத்தைக் கவனிக்கவில்லை எனக் கூறி மனைவி மனமுடைந்து குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கணவா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, அவரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்து தீா்ப்பளித்தது. தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சகோதரா் விசாரணை நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தா்மோகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கணவருக்கு திருமணத்தை மீறிய உறவு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வரதட்சிணைக் கொடுமை தொடா்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு தீா்ப்பளித்துள்ளது.

ஆரம்பக் கட்ட விசாரணையில் வரதட்சிணை தொடா்பான குற்றச்சாட்டுகள் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், அதன்பின்னா் சாட்சிகள் மூலம் அவை சோ்க்கப்பட்டுள்ளது என்பதையும் விசாரணை நீதிமன்றம் தனது தீா்ப்பில் உறுதி செய்திருக்கிறது. மேலும், கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடா்பு இருப்பதை மட்டுமே, இந்திய தண்டனை சட்டப்பிரிவு (498-ஏ)-இன்படி மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருத முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தாா்.

பின்னா், இந்த வழக்கில் கணவா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, விசாரணை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.