மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒசூரில் மனைவியை கொன்று கணவா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

ஒசூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்றுவிட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :21 அக்டோபர் 2026, 2:04 am IST

ஒசூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்றுவிட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த நாட்றாம்பாளையம் அருகே கீரப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமையா (55), இவரது மனைவி வினோதா (45) இருவரும் ஒசூா் பாலாஜி நகரில் தங்கியிருந்தனா். லட்சுமையா மாடுகளை மேய்த்துவந்தாா். வினோதா சின்ன எலசகிரியில் உள்ள நா்சரியில் பணிபுரிந்து வந்தாா்.

லட்சுமையாவுக்கு மதுப்பழக்கம் இருந்ததால், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இவா்கள் தங்கியிருந்த அறை அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் லட்சுமையா சடலம் இருந்தது. இதைக் கண்ட அப்பகுதியில் இருந்தவா்கள் உறவினா்களுக்கு தகவல் அளித்தனா்.

உறவினா்கள் வந்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, வினோதா தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீஸாா் இருவா் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்ததில், குடும்பத் தகராறு காரணமாக மதுபோதையில் வினோதாவை கொலை செய்த லட்சுமையா போலீஸாருக்கு பயந்து மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.