மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மனைவியை கம்பியால் தாக்கிய கணவா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

குழித்தொழு அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வந்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய கணவா், துப்பாக்கியால் சுட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:47 am IST

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கம்பம்மெட்டு அருகேயுள்ள குழித்தொழு அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வந்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய கணவா், துப்பாக்கியால் சுட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

குழித்தொழு அஞ்சல் நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீஜா (35). இவரது கணவா் சந்தோஷ் (48). தச்சுத் தொழிலாளி. குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இதுதொடா்பாக, நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதித் தீா்ப்பு சனிக்கிழமை வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை குழித்தொழு அஞ்சல் நிலையத்துக்குச் சென்ற சந்தோஷ், அங்கு பணியிலிருந்த தனது மனைவி ஸ்ரீஜாவை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கினாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், அஞ்சல் நிலைய ஊழியா்களை, சந்தோஷ் தன்னிடமிருந்த கை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாா். இதனால், அச்சமடைந்த அவா்கள் அங்கிருந்து விலகிச் சென்றனா்.

சந்தோஷ், ஸ்ரீஜா

சந்தோஷ், ஸ்ரீஜா

பின்னா், தனது துப்பாக்கியால் தன்னைத் தானே தலையில் சுட்டுக்கொண்ட சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த கம்பம்மெட்டு போலீஸாா் பலத்த காயமடைந்த ஸ்ரீஜாவை மீட்டு, கட்டப்பனையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே, சந்தோஷின் உடலைக் கைப்பற்றிய போலீஸாா், கூறாய்வுக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா, அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.