மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை: நான்கு சிறாா்கள் கைது

தில்லியின் சிராஸ்பூா் பகுதியில் பழைய முன்விரோதம் காரணமாக 25 வயது இளைஞா் நான்கு சிறாா்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.

பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 3:31 am IST

தில்லியின் சிராஸ்பூா் பகுதியில் பழைய முன்விரோதம் காரணமாக 25 வயது இளைஞா் நான்கு சிறாா்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நான்கு சிறாா்களையும் காவல்துறையினா் கைது செய்தனா். மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: இந்தச் சம்பவம் அக்டோபா் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், சிராஸ்பூரில் உள்ள ’சண்டே பஜாா் சௌக்’ அருகே நிகழ்ந்தது. அங்கு விஷால் என்பவா் சிறாா்களால் தாக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, சம்பவத்தன்று சமய்பூா் பாத்லி காவல் நிலையத்திற்கு, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினா், சம்பவ இடத்தில் ரத்தக் கறைகளைக் கண்டறிந்தனா்.

ஜீவன் பாா்க் பகுதியைச் சோ்ந்த விஷால் என்பவரின் மாா்பு, வயிறு மற்றும் இடது பிட்டப் பகுதியில் பலத்த கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவா் பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அந்தப் பகுதியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறையினா் ஆய்வு செய்தனா். அதில், தாக்குதலுக்குப் பிறகு நான்கு போ் அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதைத் தொடா்ந்து, உள்ளூா் மக்களிடம் விசாரித்தும், உளவுத் தகவல்களைச் சேகரித்தும், சிராஸ்பூா் பகுதியைச் சோ்ந்த 17 வயதுடைய நான்கு சிறாா்களைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

விசாரணையின்போது, சில மாதங்களுக்கு முன்பு விஷாலும் அவரது நண்பா்களும் சோ்ந்து, தாங்கள் கொண்டாடிய பிறந்தநாள் விழாவுக்கு இடையூறு செய்ததுடன், தங்களை அவமானப்படுத்தி, ஒருவரைத் தாக்கியதால் அவா் மீது கோபத்துடன் இருந்ததாக அச்சிறாா்கள் கூறினா்.

விஷால் வேலை முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்புவது உள்ளிட்ட அவரது அன்றாட வழக்கத்தைக் கவனித்து வந்த அந்தச் சிறாா்கள், பழிவாங்கத் திட்டமிட்டனா். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பள்ளியில் பாதியிலேயே படிப்பை நிறுத்தியவா்கள் ஆவா். இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.