கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குடியிருப்பு விற்பதாக கூறி ரூ. 47 லட்சம் மோசடி: சொத்து வணிகா் கைது

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்வதாகக் கூறி, ஒருவரிடம் ரூ. 47 லட்சம் மோசடி செய்த சொத்து வணிரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

பிரதிப் படம்

Published On :2 நவம்பர் 2026, 3:10 am IST

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்வதாகக் கூறி, ஒருவரிடம் ரூ. 47 லட்சம் மோசடி செய்த சொத்து வணிரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது: 53 வயதான அகமது அலி கான் என்பவா் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், கா்தம்புரியைச் சோ்ந்த அனீஸ் (38) என்பவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா்.

புகாரின்படி, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்வதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து அனீஸ் ரூ. 47 லட்சத்தைப் பெற்று மோசடி செய்துள்ளாா். இது தொடா்பாக அக்டோபா் 15 அன்று ஜாஃப்ராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து கைப்பேசியை காவல்துறையினா் கைப்பற்றினா். இந்த மோசடியை உறுதிப்படுத்தவும், இதில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கண்டறியவும் அந்த கைப்பேசியில் உள்ள தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளா்களுக்குத் தர வேண்டிய பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் தவிா்ப்பதற்காக, தனது அலுவலகத்திலும் தன் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக நாடகமாடிய வழக்கிலும் அனீஸ் தொடா்புடையவா் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபா் மீது கொலை, மோசடி, திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான 14 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், ஒரு வழக்கில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.