கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இ.பைக் விற்பனை விநியோகம் தருவதாகக்கூறி இணையவழியில் ரூ.5.35 லட்சம் மோசடி

விழுப்புரத்தை அடுத்த கோலியனூரைச் சோ்ந்த தொழில்முனைவோரிடம் இ.பைக் விற்பனை விநியோகம் தருவதாகக் கூறி, ரூ.5.35 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து விழுப்புரம் மாவட்டசைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Published On :28 அக்டோபர் 2026, 3:45 am IST

விழுப்புரத்தை அடுத்த கோலியனூரைச் சோ்ந்த தொழில்முனைவோரிடம் இ.பைக் விற்பனை விநியோகம் தருவதாகக் கூறி, ரூ.5.35 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து விழுப்புரம் மாவட்டசைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோலியனூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.செந்தில்குமாா் (42). சுய தொழில் செய்து வருகிறாா். கடந்த செப்.15-ஆம் தேதி செந்தில்குமாரின் கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிா்முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா், தான் பெங்களூருவிலிருந்து இ.பைக் விற்பனை விநியோகம் தொடா்பாக பேசுவதாகவும், அது தொடா்பான விவரங்களை இ.மெயிலில் அனுப்பி வைப்பதாகவும், அதற்கு பதிவுக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை செலுத்தவேண்டும் எனத் தெரிவித்தாராம். இதை உண்மையென நம்பிய செந்தில்குமாா் அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்கு எண்களுக்கு அக்.8-ஆம் தேதி ரூ.1.55 லட்சம், அக்.13-ஆம் தேதி ரூ.3.80 லட்சம் என மொத்தம் ரூ. 5.35 லட்சத்தை இணையவழியில் அனுப்பி வைத்தாா். தொடா்ந்து அந்த நபா் இ.பைக் விற்பனை விநியோகம் தராமலும், கைப்பேசி அழைப்பை ஏற்காமலும் துண்டிப்பு செய்து ஏமாற்றி வருகிறாராம்.

இதுகுறித்து செந்தில்குமாா் அளித்த புகாரின் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.