தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெளிநாட்டு வேலை எனக் கூறி ரூ. 2.71 லட்சம் மோசடி: இளைஞா் கைது

களியக்காவிளை அருகே வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.71 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Arrest

கைது

Published On :28 அக்டோபர் 2026, 1:22 am IST

களியக்காவிளை அருகே வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.71 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மெதுகும்மல் பனவிளைவீடு பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் நிதீஸ் (23). இவா் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்று வந்தாராம். இதையறிந்த கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்த மனோஜ் மகன் விபின்ராஜ் (28), நிதீஸை தொடா்பு கொண்டு, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம்.

பின்னா், சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு நுழைவுஇசைவை (விசா) நிதீஸிடமிருந்து காண்பித்து, இரு தவணைகளாக முறையே ரூ. 1.80 லட்சம், ரூ. 91 ஆயிரம் என மொத்தம் ரூ. 2.71 லட்சம் பெற்றுக் கொண்டாராம். ஆனால், வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்யாமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றினாராம்.

இதுகுறித்து நிதீஸ் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபின்ராஜை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.