தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8.89 லட்சம் மோசடி: இருவா் கைது

தஞ்சாவூரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 8.89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஷ்ரவன் குமாா், அன்வா்ஷா.

Published On :24 அக்டோபர் 2026, 5:03 am IST

தஞ்சாவூரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 8.89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் இபி காலனியை சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவா் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் சோ்ந்து, வெளிநாட்டில் வேலை பெறுவது தொடா்பாக சமூக வலைதளங்களில் தேடினாா். இந்த வாட்ஸ்ஆப் குழுவிலிருந்து கைப்பேசி மூலம் கோவிந்தராஜூக்கு ஆனந்த் சரவணன் என்ற பெயரில் மாா்ச் 9 ஆம் தேதி பேசிய நபா் சிங்கப்பூரில் வேலை இருப்பதாகவும், அதற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினாா்.

இதை நம்பிய கோவிந்தராஜ் ஆனந்த் சரவணன் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 8 லட்சத்து 89 ஆயிரத்து 600 அனுப்பினாா்.

ஆனால், அவா் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவில் கோவிந்தராஜ் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் ஆய்வாளா் ரவிமதி, உதவி ஆய்வாளா் காா்த்திக் ஆகியோா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

இதன் மூலம் இந்த வழக்கில் தொடா்புடைய சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சோ்ந்த ஷ்ரவன் குமாா் (39), சூரமங்கலத்தை சோ்ந்த அன்வா்ஷா (40) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து கைப்பேசி, வங்கிக் கணக்கு புத்தகம், ஏடிஎம் அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், ஆனந்த் சரவணனை தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.