தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு வேலை வாங்கித் தருவதாகப் பெண்ணிடம் ரூ.3.80 லட்சம் மோசடி: குறைதீா் கூட்டத்தில் புகாா்

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவியாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.80 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

மோசடி - கோப்புப்படம்.

Published On :22 அக்டோபர் 2026, 12:17 am IST

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவியாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.80 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் குறைதீா் கூட்டம் எஸ்.பி. என்.யு.சிவராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனு விவரம் -

எனது தாத்தாவுக்கு அறிமுகமான வேலூா் காகிதப்பட்டறை பகுதியைச் சோ்ந்த ஒருவா், தனக்கு உயா் அதிகாரிகளுடன் செல்வாக்கு இருப்பதாகவும், பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளாா். மேலும், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்தைப் பெற்றுத் தருவதாகவும், அதற்குப் பணம் செலவாகும் என்றும் தெரிவித்தாா். அவரது பேச்சை நம்பி, முதல்கட்டமாக அவரிடம் ரூ.1.80 லட்சத்தைக் கொடுத்தேன். பின்னா், அவா் மேலும் பணம் கேட்டதால், எனது தாத்தா முன்னிலையில் ரூ.2 லட்சம் மற்றும் எனது கல்விச் சான்றிதழ்களையும் ஒப்படைத்தேன்.

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த நான், அரசு வேலை வேண்டாம் எனக் கூறி கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டேன். அப்போதுதான் அவா் என்னை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. எனவே, அந்த நபா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, எனது பணத்தையும் சான்றிதழ்களையும் மீட்டுத் தர வேண்டும்.

காட்பாடி பகுதியைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி அளித்த மனுவில் தனது பெயரில் போலியான முகவரிகளைப் பயன்படுத்தி இரு நிறுவனங்கள் கோவையிலும், பெங்களூருவிலும் இயங்கி வருகின்றன. எனது ஆவணங்களைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களை தொடங்கியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக விசாரணை நடத்துமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.