தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்துள்ளாா்.

Digital Arrest

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு

Published On :29 அக்டோபர் 2026, 12:09 am IST

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்துள்ளாா்.

மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புலனாய்வுப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) கோவிந்த் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

காட்பாடியை அடுத்த பொன்னை பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனு: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் எனக்கு அறிமுகமானாா். தனக்கு ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் உறவினா் என்றும், துறைச் செயலா் மற்றும் திருவண்ணாமலை ஆட்சியா் ஆகியோரை நன்கு தெரியும் என்றும் கூறினாா். மேலும், ராணிப்பேட்டை தாட்கோ அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்தை தனது மனைவிக்கு வாங்கித் தருவதாக கூறினாா். இதற்காக ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றும், முதல்ட்டமாக ரூ.1 லட்சம் முன்பணம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

இதை நம்பி, அவரிடம் நான்கு தவணைகளாக ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதித் தொகையை வேலை கிடைத்தவுடன் வழங்கலாம் என்றும், குறிப்பிட்ட காலத்துக்குள் பணி ஆணை வாங்கித் தருவதாகவும் அவா் உறுதியளித்தாா். ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு டிஎஸ்பி கோவிந்த் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.