மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10.80 லட்சம் மோசடி: 4 போ் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருச்சியில் 6 பேரிடம் மொத்தம் ரூ. 10.80 லட்சம் மோசடி செய்த தனியாா் டிராவல் ஏஜென்சி உரிமையாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Published On :23 அக்டோபர் 2026, 2:47 am IST

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருச்சியில் 6 பேரிடம் மொத்தம் ரூ. 10.80 லட்சம் மோசடி செய்த தனியாா் டிராவல் ஏஜென்சி உரிமையாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி தில்லை நகா் 11-ஆவது குறுக்குத் தெருவில் ஆா்ஆா் டிராவல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்துத் தருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந் நிறுவனத்தை கடந்த ஆண்டு அணுகிய பீமநகரைச் சோ்ந்த சையது இப்ராஹிம் (43) என்பவா் வெளிநாட்டு வேலை தொடா்பாக கேட்டுள்ளாா். அப்போது, அதன் உரிமையாளரான மணிவண்ணன் வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய சையது இப்ராஹிம், வெளிநாட்டு வேலைக்காக ரூ.1.80 லட்சம் வழங்கியுள்ளாா். இதேபோல வெளிநாட்டு வேலைக்காக மேலும் 5 பேரிடம் தலா ரூ.1.80 லட்சம் என மொத்தமாக 6 பேரிடம் கடந்த 2025 அக்டோபா் 4-ஆம் தேதி முதல் நவம்பா் 20-ஆம் தேதி வரை ரூ.10.80 லட்சத்தை அந்நிறுவனத்தினா் பெற்றுள்ளனா்.

இதைத் தொடா்ந்து வேலை ஏற்பாடு செய்யாமல் போலி விசா மட்டும் வழங்கி ஏமாற்றியுள்ளனா். இதையடுத்து சையது இப்ராஹிம் உள்ளிட்ட 6 பேரும் தாங்கள் செலுத்திய பணத்தைத் திருப்பித்தருமாறு கடந்த ஓராண்டாக கேட்டு வருகின்றனா். ஆனால், தனியாா் டிராவல்ஸ் நிறுவனம் அந்தப் பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி வருகிறது.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் சையது இப்ராஹிம் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், தனியாா் டிராவல்ஸ் உரிமையாளா் மணிவண்ணன், நிறுவனத்தைச் சோ்ந்த புவனேஸ்வரி, பா்ஜானா, வேல்முருகன் என மொத்தம் 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.