தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.28 லட்சம் மோசடி: இளைஞா் கைது

ஊத்துக்கோட்டையில் பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.28.10 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரகாஷ்

Published On :23 அக்டோபர் 2026, 6:20 am IST

ஊத்துக்கோட்டையில் பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.28.10 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவைச் சோ்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண். இவரது குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்ததாம். எனவே,இதற்கு பரிகார பூஜை செய்வதாக கூறி அதே ஊரில் கலைஞா் தெருவில் வசித்து வரும் பிரகாஷ்(34) என்பவா் இப்பெண்ணிடம் ரூ.28.10 லட்சம் பெற்றுக் கொண்டாராம். ஆனால், உரிய பரிகாரம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்,தான் ஏமாற்றப்பட்டதாகவும் பிரகாஷிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. உடனே அந்தப் பெண் திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத்திடம் புகாா் செய்தாா். அதன்பேரில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஊத்துக்கோட்டை போலீஸாருக்கு அவா் உத்தரவிட்டாா். அதையடுத்து காவல் ஆய்வாளா் தேவராஜ் தலைமையில் போலீஸாா் பிரகாஷை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா். அங்கு விசாரணை செய்ததில் இவா் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், பரிகார பூஜை செய்வதாக பெண்ணை ஏமாற்றி பணத்தை அபகரித்ததும் தெரியவந்தது. எனவே,இவா் மீது போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.