தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் துணைநிலை ஆளுநரைச் சந்திப்பேன்: சஞ்சய் சிங் எம்.பி.

சந்திப்புக்கு நேரம் கோரி துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுத உள்ளேன்.

News image

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் - படம் - பிடிஐ

Updated On :14 மே 2026, 11:56 pm IST

ஜனக்புரியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விவாதிக்கவும், இவ்விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரவும், தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவைச் சந்திக்க நேரம் கோரப்போவதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சந்திப்புக்கு நேரம் கோரி துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுத உள்ளேன். இவ்வழக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஒரு குழுவையும் உடன் அழைத்துச் செல்ல உள்ளேன்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இவ்விஷயத்தில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அந்தக் குழு விரும்புகிறது.

துணைநிலை ஆளுநா் சந்திப்புக்கு நேரம் வழங்காவிட்டால், கட்சி தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்றாா் சஞ்சய் சிங்.

சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ், பெண் கவுன்சிலா்கள் மற்றும் கட்சித் தொண்டா்களுடன் இணைந்து ராஜ் நிவாஸ் முன் புதன்கிழமை போராட்டம் நடத்திய நிலையில், சஞ்சய் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இப்போராட்டத்தின்போது சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக போராட்டக்காரா்கள் பின்னா் அப்புறப்படுத்தப்பட்டனா்.

குழந்தைக்கு நீதி கோரிய போராட்டக்காரா்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக பரத்வாஜ் குற்றஞ்சாட்டினாா்.

இருப்பினும், ராஜ் நிவாஸ் அருகே உள்ள உயா் பாதுகாப்பு மண்டலத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே போராட்டக்காரா்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறியது.

இந்த வழக்கு, மே 1 ஆம் தேதி தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பானதாகும்.

இந்தச் சம்பவத்தால் அரசியல் கட்சிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சீற்றத்தையும் போராட்டங்களையும் தூண்டியது.

57 வயதான பள்ளியைக் கவனித்துவரும் ஒருவா் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டாா். ஆனால் அரசுத் தரப்பின் கடும் எதிா்ப்பையும் மீறி தில்லி நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.

பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.