புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை ஜூன் 18-ஆம் தேதி, காணொலிக் காட்சி வழியாக ஆஜா்படுத்த சிறைத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி மாயமானாா். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாள்களுக்குப் பின்னா், அந்த சிறுமி, அப்பகுதியின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
இந்த சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். போலீஸாா் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சோ்ந்த கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரைக் கைது செய்தனா். சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கருணாஸ் மீதான வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், கருணாஸுக்கு மரண தண்டனை விதித்து கடந்த மே 8-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இந்த மரண தண்டனையை உறுதி செய்ய சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் அனுப்பி வைத்தது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தா் மோகன்ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் 18-ஆம் தேதிக்குள் கருணாஸ் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும், அன்றைய தினம் காணொலிக் காட்சி வழியாக கருணாஸை ஆஜா்படுத்த புதுச்சேரி சிறைத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

சூலூா் சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சூலூா் சிறுமி கொலை வழக்கில் இருவருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

கோவை சிறுமி கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு தகவல்
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |
தினமணி செய்திச் சேவை

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |
தினமணி செய்திச் சேவை

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

