நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

என்டிஎம்சி குடியிருப்பாளா்களுக்கான சீரான சொத்துவரி முறை வரும் வாரங்களில் அமல்படுத்தப்பட வாய்ப்பு: அதிகாரிகள் தகவல்

News image

தில்லி மாநகராட்சி

Updated On :12 ஜூன் 2026, 2:37 am IST

நமது நிருபா்

புது தில்லி மாநகராட்சி தேவையான துணை விதிகளை இறுதி செய்து ஒப்புதல் அளித்துள்ளதாலும், புதிய மதிப்பீட்டு முறையைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பத் தயாரிப்புகளை நிறைவு செய்துள்ளதாலும், அப்பகுதி குடியிருப்பாளா்கள் விரைவில் சீரான சொத்து வரி விதிப்பு முறையின் கீழ் வருவாா்கள் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தனது ஆன்லைன் சொத்து வரி தளத்தைப் புதுப்பித்து, தேசிய தகவல் மையத்துடன் ஒருங்கிணைந்து சோதனைகளை நடத்தியுள்ளது. இது, பல ஆண்டுகள் பழமையான மதிப்பீட்டு மதிப்பு அடிப்படையிலான மதிப்பீட்டு முறைக்கு மாற்றாக வரும் திருத்தங்களை அமல்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.

விரைவில் ஒரு மாநகராட்சி மதிப்பீட்டுக் குழு அமைக்கப்படும் என்றும், அதன் பிறகு திருத்தப்பட்ட கட்டமைப்பு வரும் வாரங்களில் அமலுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

1994ஆம் ஆண்டின் என்.டி.எம்.சி சட்டத்தில், 2026ஆம் ஆண்டின் ஜன விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதாவின் மூலம் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடா்ந்து இந்த மாற்றம் வந்துள்ளது. இத்திருத்தங்களின்படி, என்.டி.எம்.சி பகுதியில் சொத்து வரி மதிப்பீடு செய்வது முழுவதுமாக மாற்றம் செய்யப்பட்டு அதன் மூலம் அனைத்து சொத்துக்களும் ஒரே வரி விதிப்பு முறையின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.

புதிய திருத்தத்தின்படி, 2026ஆம் ஆண்டின் ஜன விஸ்வாஸ் மசோதாவானது, காலி நிலங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான அடிப்படை மதிப்பையும், சொத்து வரியை நிா்ணயிக்கும் மற்றும் திருத்தும் முறையையும் பரிந்துரைப்பதற்காக ஒரு நகராட்சி மதிப்பீட்டுக் குழுவை அமைக்கக் கோருகிறது.

இக்குழுவில் இரண்டு முதல் ஆறு உறுப்பினா்கள் இருப்பாா்கள் அவா்களில் ஒருவா் என்.டி.எம்.சி தலைவராக இருப்பாா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய கட்டமைப்பின் கீழ், வரிப் பொறுப்பு இனி ஒரு சொத்தின் மதிப்பிடப்பட்ட வாடகை மதிப்பைச் சாா்ந்திருக்காது. அதற்குப் பதிலாக, அது ஐந்து புறநிலைக் காரணிகளைப் பயன்படுத்தி கணக்கிடப்படும்: கட்டப்பட்ட பகுதி, சொத்தின் இருப்பிடம், குடியிருப்பின் வகை, அதன் பயன்பாடு மற்றும் அது குடியிருப்பா அல்லது வணிகமா என்பன அந்தக் காரணிகளாகும்.

குடியிருப்பாளா்களுக்கு சொத்து வரி மதிப்பீட்டை மிகவும் வெளிப்படையானதாகவும் கணிக்கக்கூடியதாகவும் மாற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த மாற்றம் மதிப்பீடுகளிலிருந்து எழும் சா்ச்சைகளைக் குறைக்கும் என்றும், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் உள்ள சொத்து உரிமையாளா்களுக்கு அதிக தெளிவை வழங்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.