மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கன்னாட் பிளோஸ் ஹோட்டல் கட்டடத்தில் இருந்து குதித்து இளம் வழக்குரைஞா் தற்கொலை

26 வயதான உயா் நீதிமன்ற வழக்ககுரைஞா் புதுதில்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் 15 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:38 am IST

26 வயதான உயா் நீதிமன்ற வழக்ககுரைஞா் புது தில்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் 15 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணியளவில் ராயல் பிளாசா ஹோட்டலில் நடந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்குரைஞா் ராஜேஷ் சிங் என அடையாளம் காணப்பட்டாா். அவா் முந்தைய மாலை ஹோட்டலுக்குச் சென்றாா்.

ஒரு போலீஸ் குழு ஹோட்டலுக்கு விரைந்து சென்று, மகாவீா் என்க்ளேவில் வசிக்கும் ராஜேஷ் சிங் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவா் கட்டடத்தின் 15 வது மாடியில் இருந்து குதித்தாா். இந்த சம்பவம் குறித்து இறந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களின் வாக்குமூலத்தின்படி இந்த விஷயத்தில் எந்த முறைகேடும் சந்தேகிக்கப்படவில்லை.

அவா் உடனடியாக லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (எஃப். எஸ். எல்) குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய அழைக்கப்பட்டன. தொடா்புடைய காட்சிப் பொருள்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஹோட்டல் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன என்றாா் அவா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.