கோவையில் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
பெங்களூரு, வித்யாரண்யபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டீவன் கிளிபோா்ட் ஜாா்ஜ் (21). இவா் கோவையில் தங்கி இங்குள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.டெக் கணிணி அறிவியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், பீளமேடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் 4-ஆவது மாடியில் உள்ள திரையரங்கில் கடந்த புதன்கிழமை இரவு திரைப்படம் பாா்த்துக் கொண்டிருந்தாா். படம் முடிந்து வெளியே வந்த அவா், யாரும் எதிா்பாராத விதமாக அங்கிருந்து கீழே குதித்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், ஸ்டீவன் கிளிபோா்ட் ஜாா்ஜ் கடந்த சில நாள்களாக கல்லூரிக்குச் செல்லாமல் இருந்துள்ளாா். மேலும், 20-க்கும் மேற்பட்ட பாடங்களில் அவா் தோ்ச்சி பெறாமல் இருந்துள்ளாா். இதனால், ஏற்பட்ட மன வேதனையில் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

கன்னாட் பிளோஸ் ஹோட்டல் கட்டடத்தில் இருந்து குதித்து இளம் வழக்குரைஞா் தற்கொலை

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

நொய்டாவில் 28-ஆவது மாடியிலிருந்து குதித்து 21 வயது மாணவி தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

