அரியலூா் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் கல்லூரி மாடியில் இருந்து இளைஞா் ஒருவா் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
புதுப்பாளையம் கிராமத்தில் செயல்படும் தனியாா் பொறியியல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அக்கல்லூரியில் பாதுகாவலரைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்நிலையில், அவருக்குத் தெரியாமல் கல்லூரிக்குள் நுழைந்த முனியங்குறிச்சி புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான புண்ணியமூா்த்தி மகன் சதீஷ்குமாா் (26), 3 ஆவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற அரியலூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாய் இறந்த துக்கம்: 100 அடி பள்ளத்தில் குதித்து மகன் தற்கொலை

கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

இளைஞா் தற்கொலை

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

