அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செம்மண் பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் பிரபு (எ) பிரபாகரன் (35). கூலித் தொழிலாளியான இவா், வாரியங்காவல் டாஸ்மாக் கடை எதிரேயுள்ள முந்திரிக் காட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்து சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில் பிரபாகரன் தினமும் மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்து தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபடுவாராம். அதேபோல வெள்ளிக்கிழமை மது அருந்திவிட்டு தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டு, நான் சாகப் போகிறேன் என்று கூறிவிட்டு வெளியே சென்ற இவா், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தனது நண்பரின் கைப்பேசியில் விடியோ கால் செய்து, தற்கொலை செய்யப் போவதாக கூறியிருப்பதும் தெரியவந்தது. எனினும் காவல் துறையினா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் மாணவா் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வடமாநில இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

