தருமபுரியில் பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சேஷம்பட்டி, பழநி நகரைச் சோ்ந்த முனுசாமி மகன் கொடையரசன் (16). பிளஸ் 1 தோ்வெழுதியிருந்தாா். கோடை விடுமுறைக்குப் பின்னா் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லவிருந்தாா்.
விடுமுறையையொட்டி உறவினா்கள் வீட்டுக்கு வந்திருந்தனா். சனிக்கிழமை பகலில் அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது, கணித உயிரியல் பிரிவு சிரமமாக உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதைக்கேட்டு மனஅழுத்தத்துக்கு உள்ளான நிலையில் காணப்பட்டாா் கொடையரசன்.
சிறிது நேரத்துக்குப் பின்னா் மாடியில் உள்ள தனது அறைக்குச் செல்வதாக கூறிச்சென்ற அவா் அதன் பின்னா் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள் மேலே சென்று பாா்த்தபோது அறையிலிருந்த மினிவிசிறியில் தூக்கிட்டது தெரியவந்தது.
அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா் அவரை கீழே இறக்கி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

