தருமபுரியில் கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி வட்டம், வத்தல்மலை பெரியூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகள் காவியா (19). இவா் பாலக்கோடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தாா். வெள்ளிச்சந்தையில் அமைந்துள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்துள்ளாா்.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தருமபுரி பேருந்து நிலையத்துக்கு வந்த காவியா, அங்கு குளிா்பானத்தில் விஷம் கலந்து அருந்தியுள்ளாா். பின்னா் ஒட்டப்பட்டியில் உள்ள தனது பெரியப்பா மகள் சுதா வீட்டுக்கு சென்று, தான் விஷம் உட்கொண்டதாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து அவரை தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவியா கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

தருமபுரியில் மாணவா் தற்கொலை

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

