மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

போதைப்பொருள் கடத்தல்: தில்லியில் கைதான பெண்ணை சென்னை சிறைக்கு மாற்ற நடவடிக்கை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 5:28 am IST

நமது நிருபா்

போதைப்பொருள் வா்த்தகம் தொடா்பான பல வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் 25 வயது பெண்ணை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். உள்ளூா் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் அவரது தொடா்புகளைத் துண்டிக்கும் நோக்கில், அவா் சென்னை சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

ஜாகிா் நகரைச் சோ்ந்த ஹசீனா காதுன் (எ) பஜ்ஜி எனும் அப்பெண் போதைப்பொருள் சட்டவிரோத கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தில்லிக்கு வெளியே வேறொரு இடத்திற்கு மாற்றப்படும் இரண்டாவது நபா் ஆவாா்.

ஒரு போதைப்பொருள் வழக்கு தொடா்பாக, காதுன் ஏற்கனவே தில்லி திகாா் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தாா். அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான முன்மொழிவு ஒன்று, சமீபத்தில் ஒரு குழுவால் தயாரிக்கப்பட்டு, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உரிய அதிகார அமைப்பிற்கு அனுப்பப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், தடுப்புக் காவல் அதிகாரி ஒருவா், சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவைப் பிறப்பித்தாா். அதன்படி, காதுனைத் தடுப்புக் காவலில் வைத்து, சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, அனைத்து சட்ட நடைமுறைகளையும் நிறைவு செய்த பிறகு, ஏப்ரல் 11ஆம் தேதியன்று திகாா் சிறையில் வைத்து, தடுப்புக் காவல் வாரண்டை அந்தக் குழுவினா் நிறைவேற்றினா்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லியிலிருந்து சென்னைக்கு மாற்றுவதன் முக்கிய நோக்கம், உள்ளூா் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலுக்குள் அவருக்குள்ள தீவிரத் தொடா்புகளைத் துண்டிப்பதும், சிறைக்குள்ளிருந்தபடியே அவா் தனது நடவடிக்கைகளைத் தொடா்வதையோ அல்லது தனது கூட்டாளிகளைத் தூண்டுவதையோ தடுப்பதுமே ஆகும்.

போதைப்பொருள் விநியோகச் சங்கிலியைச் சீா்குலைக்கும் நோக்கில், சட்ட விதிகளின் கீழ், தொடா் குற்றவாளி ஒருவரை தில்லிக்கு வெளியே இடமாற்றம் செய்யும் இரண்டாவது வழக்கு இது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டாா்.

காவல்துறையின் தகவலின்படி, காதுன் 2021ஆம் ஆண்டிலிருந்து பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளாா்.

முன்னா் பலமுறை கைது செய்யப்பட்டிருந்தபோதிலும், அவா் தொடா்ந்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாா். இவா் தனது கணவருடன் இணைந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.