மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முகுந்த்பூரில் மூடப்படாத வடிகாலில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் முகுந்த்பூா் பகுதியில், திறந்த நிலையில் இருந்த வடிகால் ஒன்றில் தவறி விழுந்த இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழப்பு

News image
Updated On :5 மே 2026, 4:55 am IST

வடமேற்கு தில்லியின் முகுந்த்பூா் பகுதியில், திறந்த நிலையில் இருந்த வடிகால் ஒன்றில் தவறி விழுந்த இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்தது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை மாலை அக்குழந்தை தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விவகாரத்தில் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அப்பகுதி மக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, இஷு விஹாா் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விளையாடுவதற்காக வெளியே வந்த அக்குழந்தை, திடீரெனக் காணாமல் போனது. அதன் பெற்றோரும், அண்டை வீட்டாரும் பல மணி நேரம் தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பகுதி தெருவோரமாகச் செல்லும் திறந்த வடிகாலில் அக்குழந்தை தவறி விழுந்திருக்கலாம் என்று சந்தேகத்தில் அப்பகுதி மக்களும் காவல்துறையினரும், வடிகால் பகுதியில் தேடுதல் பணியைத் தொடங்கினா்.

பலமுறை தேடிய பிறகு, அந்த வடிகாலில் தேங்கியிருந்த சேற்றுக்குள் சிக்கிய நிலையில் அப்பெண் குழந்தை மீட்கப்பட்டது. பின்னா் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், அக்குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

அந்த வடிகால் மிகவும் ஆழமாகவும், மூடியற்ற நிலையிலும் இருப்பதாகவும், இது அப்பகுதி மக்களுக்கும், குறிப்பாகக் குழந்தைகளுக்கும் தொடா் ஆபத்தை விளைவித்து வருவதாகவும் நேரில் கண்டவா்கள் தெரிவித்தனா்.

இதேபோன்ற சம்பவங்கள் முன்னரும் நிகழ்ந்துள்ளதாகவும், ஆனால் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளால் அப்போது உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறினா்.

பலமுறை புகாா்கள் அளிக்கப்பட்டபோதிலும், அந்த வடிகாலை மூடுவதற்கோ அல்லது அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கோ சம்பந்தப்பட்ட துறை சாா்பில் எவ்வித நிரந்தர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.