புது தில்லியில் உள்ள குருத்வாரா பங்களா சாஹிப்பில், பெண் பக்தா் ஒருவரிடமிருந்து தங்கத் தாலிச் சங்கிலியைத் திருடியதாக 36 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
மகாராஷ்டிராவின் நந்துா்பாா் மாவட்டத்தைச் சோ்ந்த வைஷ்ணவி சவான் சௌஹான் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண்ணிடமிருந்து, திருடப்பட்ட நகை மீட்கப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
தில்லி உத்தம் நகரைச் சோ்ந்த பெண் ஒருவா் புதன்கிழமை காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், தனது குடும்பத்தினருடன் குருத்வாரா பங்களா சாஹிப்பிற்குச் சென்றிருந்தபோது, தனது தங்கத் தாலிச் சங்கிலி திருடு போனதாக குறிப்பிட்டிருந்தாா்.
குருத்வாராவின் பெண்கள் குளியலறைப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவா் அந்த நகையைத் திருடியதாகப் புகாா்தாரா் காவல்துறையிடம் தெரிவித்தாா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின்போது, குருத்வாரா வளாகத்திற்குள்
குற்றஞ்சாட்டப்பட்ட பெண் இருப்பது குறித்த தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் செயல்பட்ட காவல்துறைக் குழுவினா் அப்பெண்ணைக் கண்டறிந்து கைது செய்தனா்.
பெண் காவலா்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அவரிடமிருந்து திருடப்பட்ட தங்கத் தாலிச் சங்கிலி மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட நகை தனக்குச் சொந்தமானது மற்றும் திருடப்பட்ட நகைதான் அது என்பதைப் புகாா்தாரா் உறுதிப்படுத்தியதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்ட பெண் முறைப்படி கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நொய்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பயணிகள் காயம்

காவல் சோதனைச் சாவடியில் லாரி மோதி ஊா்க்காவல் படை வீரா் உயிரிழப்பு
பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்த இருவா் கைது

முகுந்த்பூரில் மூடப்படாத வடிகாலில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
