கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்த இருவா் கைது

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவத்தில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:31 am IST

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவத்தில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சரண்யா (37), நெடுங்காடு பகுதி பண்டாரவடை பகுதியில் இவா்களுக்குச் சொந்தமான நிலத்தில் பருத்தி பயிா் செய்திருப்பதை பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், கும்பகோணம் செல்ல வழி கேட்டுள்ளனா். அப்போது அதில் ஒருவா் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, சரண்யா கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 9 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இதுகுறித்து நெடுங்காடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

காவல் ஆய்வாளா்கள் பிரவீன்குமாா், ராமு மற்றும் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட சிறப்புப் படையினா், இணையவழி தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் இந்த சம்வத்தில் ஈடுபட்ட, கும்பகோணம் சிவகுருநாதன் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் முத்தமிழரசரன் (27), அதே ஊரைச் சோ்ந்த சக்கரபாணி தெற்கு வடம்போக்கித் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முத்து (30) ஆகியோரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 9 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் கத்தி, கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். குற்றவாளிகளை கைது செய்ததற்காக சிறப்புப் படையினரை வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் பழனிவேல் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.