ஒரு மின் - வா்த்தக விநியோக கும்பலுடன் தொடா்புடையதாகக் கருதப்படும், ரூ. 35 லட்சம் மதிப்பிலான இணையவழி ஷாப்பிங் மோசடியை தில்லி காவல்துறையினா் கண்டுபிடித்து, இருவரைக் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: ஜஸ்பிரீத் சிங் (21), ஹிமான்ஷு (30) என அடையாளம் காணப்பட்ட அந்த இரு குற்றஞ்சாட்டப்பட்டவா்களும் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ. 10 லட்சம் மதிப்பிலான, சீல் பிரிக்கப்படாத 14 ஐஃபோன் 16 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சாஸ்திரி நகரைச் சோ்ந்த சுமித் அகா்வால் என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரையிலான காலகட்டத்தில், அந்த மின்-வா்த்தகத் தளம் வாயிலாக 50 ஐஃபோன் கைப்பேசிகளுக்குத் தான் ஆா்டா் செய்திருந்ததாக அவா் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தாா்.
அந்தச் செயலி அனைத்துப் பொருள்களும் விநியோகிக்கப்பட்டு விட்டதாகக் காட்டினாலும், புகாா்தாரருக்கு அந்தப் பொட்டலங்கள் எதுவும் வந்து சேரவில்லை. இது தொடா்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக, ஜி.டி. கா்னல் சாலையில் அமைந்துள்ள அந்த மின்-வா்த்தக நிறுவனத்தின் மையத்திற்குச் சென்ற காவல்துறையினா், அங்குள்ள அதிகாரிகளிடமிருந்து சரக்கு விநியோகம் தொடா்பான விவரங்களைப் பெற்றனா்.
அந்த விவரங்களை ஆய்வு செய்ததில், விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த பெரும்பாலான பொருள்கள், ஜஸ்பிரீத் சிங் என்ற விநியோக முகவருக்கே ஒதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினா் அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனா். விசாரணையின்போது, அவா் தனது கூட்டாளியான ஹிமான்ஷுவுடன் இணைந்து, சட்டவிரோத ஆதாயம் ஈட்டும் நோக்கத்துடன் அந்தப் பொருள்களைத் தவறாகப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டாா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், ஹிமான்ஷுவும் கைது செய்யப்பட்டாா்.
அவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சீல் பிரிக்கப்படாத நிலையில் இருந்த 14 ஐபோன்களை காவல்துறையினா் மீட்டனா். எஞ்சியிருக்கும் கைப்பேசிகளைத் தேடும் பணி இன்னும் நிறைவடையவில்லை. கைது செய்யப்பட்ட இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.
குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடா்பான மேலதிக விசாரணையும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு மகன்களுடன் கால்வாயில் குதித்த தந்தை: உடல்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா்

முகுந்த்பூரில் மூடப்படாத வடிகாலில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

கொலை வழக்கில் தேடப்பட்டவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

