தற்போதைய செய்திகள்
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை நிகழ்வுகள் - முழுவிவரம்
சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்களின் ஆதரவோடு விஜய் வெற்றி பெற்றார். 22 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் - டிஐபிஆர்
நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்
தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் முன்மொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது ஆதரவு உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து உறுப்பினர்கள் உரையாற்றி வருகிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!
நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை செய்யப்படுகிறது.
ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது: தவெகவுக்கு விசிக ஆதரவு
ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது: தவெகவுக்கு விசிக ஆதரவு
தவெக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது.
தவெகவில் குதிரை பேரம்: பிரேமலதா
தவெகவில் குதிரை பேரம்: பிரேமலதா
தமிழக வெற்றிக் கழகத்தில் குதிரை பேடம் நடந்துள்ளதாகவும், ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி வழங்க வேண்டும் எனவும் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இன்று அவரின் அரசியல் சிறப்பு அதிகாரியாக தனது ராஜகுருவான ஜோதிடர் ரத்தட் பண்டிட்டை அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக குறிப்பிட கடமைப்பட்டிருக்கேன்.
உங்களுக்கு அவர் ராஜகுரு என்றால், தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு எதற்கு அரசுப் பதவி வழங்க வேண்டும். இளைஞர்கள் உங்களை நம்பி வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு இதன் மூலம் நீங்கள் என்ன கருத்தை முன்வைக்கிறீர்கள் என்பதை கூற வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு: பாமக ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை!
நம்பிக்கை வாக்கெடுப்பு: பாமக ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை!
தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விலகி இருக்க விரும்புவதாக தருமபுரி பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை பாமக எடுத்துள்ளது.
அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் கூட இல்லை: ஜவாஹிருல்லா
அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் கூட இல்லை: ஜவாஹிருல்லா
தவெக அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர்கள் கூட இல்லை. சிறுபான்மையினக்கு விஜய் வாய்ப்பளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா அறிவுறுத்தியுள்ளார்.
தவெகவுக்கு 33% வாக்குகள்; எதிர்க்கட்சிகளுக்கு 66% வாக்குகள்
தவெகவுக்கு 33% வாக்குகள்; எதிர்க்கட்சிகளுக்கு 66% வாக்குகள்
தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்கள் 33% வாக்களித்துள்ளதாகவும், எஞ்சிய 66% வாக்குகள் எதிர்க்கட்சியினருக்கே கிடைத்துள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி
புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி
புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சியை முதல்வர் ஜோசப் விஜய் செய்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
ஊழல் சக்தியுடன் விஜய் சேர்ந்தது ஏன்?
ஊழல் சக்தியுடன் விஜய் சேர்ந்தது ஏன்?
சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு 1.72 கோடி பேர்தான் வாக்களித்தார்கள். உங்கள் கட்சிக்கு எதிராக 65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
தேர்தலில் ஊழல் சக்தி எனக் கூறினீர்கள். தற்போது ஊழல் சக்தியுடன் சேர்ந்திருக்கும் உங்கள் ஆட்சி என்ன சக்தி என்று மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளார்கள். உங்கள் அரசு எத்தனை நாள் நீடிக்கும் எனக் கேள்வி எழுப்பப்படுகிறது.
பிரசாரத்தில் ’மற்றும் சிலர்’ கட்சிகள் எனக் கூறிய கட்சியின் சிலரின் ஆதரவுடன் ஆட்சி நடத்த முயற்சிக்கிறார் முதல்வர் விஜய். அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்க விரும்புகிறார். பெருமான்மையும் நேர்மையும் இல்லாத அரசு எப்படி நல்லாட்சி தரும் - உதயநிதி ஸ்டாலின்
சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் - டிஐபிஆர்
குதிரை வேகத்தில் செயல்படும் அரசு: விஜய்
குதிரை வேகத்தில் செயல்படும் அரசு: விஜய்
தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல, குதிரை வேகத்தில் செயல்படும் அரசு. நிச்சயமாக இந்த அரசு மதச்சார்பற்ற அரசாக செயல்படும் என முதல்வர் சி. ஜோசப் விஜய் பேச்சு.

சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் - டிஐபிஆர்
திமுக வெளிநடப்பு
திமுக வெளிநடப்பு
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு
எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு
பேரவைக்கு வெளியே உறுப்பினர்கள் சென்றிந்தால் உள்ளே வருவதற்கான வாய்ப்பாக மூன்று முறை மணி ஓசை எழுப்பப்பட்டது. பின்னர் கதவுகள் மூடப்பட்டு எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
பகுதி வாரியாக எழுந்து நின்ற உறுப்பினர்களின் பெயர்களை அவைத் தலைவர் வாசித்து ஒவ்வொருவரின் பெயராகக் கூற, எழுந்து நின்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அமர்ந்து வாக்களித்து வருகின்றனர்.
எண்ணிக் கணிக்கும் முறையில் பங்கேற்ற உறுப்பினர்கள் - டிஐபிஆர்
ஆறு பிரிவுகளில் வாக்கெடுப்பு
ஆறு பிரிவுகளில் வாக்கெடுப்பு
சட்டப்பேரவையில் அமர்ந்துள்ள உறுப்பினர்களை ஆறு பிரிவுகளாகப் பிரித்து எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவில் உள்ள உறுப்பினர்களை எழுந்து நிற்கவைத்து, அவர்களின் பெயர்களை வாசிக்க ஒவ்வொருவராக அமர்ந்து தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.
இதேபோன்று அரசுக்கு எதிர்ப்பு, நடுநிலை போன்றவையும் கணக்கெடுக்கப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 22 பேர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடுநிலையாக 5 பேர் உள்ளனர்.
பெரும்பான்மையை நிரூபித்தார் விஜய்
பெரும்பான்மையை நிரூபித்தார் விஜய்
சட்டப்பேரவையில் பெரும்பான்மை கோரி தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். இதன்மூலம் தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்தார்.
வாகை சூடும் வரலாறு திரும்பியது
வாகை சூடும் வரலாறு திரும்பியது
மனசாட்சி உள்ள மக்களாட்சியை உறுதி செய்த உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த அணியும் இல்லாமல், தனி சிறப்பு மிக்க அணியாக, மக்களை விடும்பும் அணியாக களம் காண்போம்.
1967, 1977 ஆம் ஆண்டு ஆட்சியைப் போல 2026 தேர்தலில் தவெகவும் சாமானியர்களுக்கான அரசை அமைக்கும். வாகை சூடும் வரலாறு திரும்பியது. விசில் அலை வெற்றி அலையாக மாறியது. ஒரு விரல் புரட்சி விசில் புரட்சியானது.
நூலிழையில் தனிப்பெரும்பான்மை தள்ளிப்போனது: விஜய்
நூலிழையில் தனிப்பெரும்பான்மை தள்ளிப்போனது: விஜய்
சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை நிலைநாட்டும் அரசு தவெக அர்சு. உழைக்கும் வர்க்கத்தினர் உள்பட அனைவருக்கும் அமைந்த அரசுதான் இந்த அரசு. நம்பிக்கை தீர்மானத்தில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் - டிஐபிஆர்
முந்தைய அரசின் திட்டங்கள் தொடரும் : விஜய்
முந்தைய அரசின் திட்டங்கள் தொடரும் : விஜய்
நாட்டு நலன், மக்களின் நலன், எங்களுடைய கொள்கைத் தலைவர்கள் எண்ணங்களை மனதில் வைத்து இந்த அரசு செயல்படும்.
முந்தைய அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
தவெக சிறுபான்மையினருக்கான அரசு : விஜய்
தவெக சிறுபான்மையினருக்கான அரசு : விஜய்
தமிழக வெற்றிக் கழகம் சிறுபான்மையினருக்கான அரசு. எல்லோரையும் விரும்பும் அரசு. எவரையும் வெறுக்கும் அரசு அல்ல. அனைவரையும் அரவணைக்கும் அரசு.
காங்கிரஸ் குறிப்பிட்டது போல எங்களுடைய அரசு மதச்சார்பற்ற அரசாகத்தான் செய்லபடும் என்று உறுதியளித்துக் கொள்கிறேன்.
பிரேமலதா கூறிய சில கருத்துகள் (குதிரை பேரம், ஜோதிடருக்கு அரசுப் பதவி) பற்றி நான் பரிசீலனை செய்கிறேன். அதேபோல சௌமியா அன்புமணி கூறியது பற்றியும் யோசிக்கிறேன் என்றார் விஜய்.
பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்ற நிலையில், சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்.
ஜே.சி.டி. பிரபாகர் - டிஐபிஆர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு




