தமிழக வெற்றிக் கழகத்தில் குதிரை பேரம் நடந்துள்ளதாகவும், ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி வழங்க வேண்டும் எனவும் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.
அந்தவகையில் தேமுதிக சார்பில் பேசிய பிரேலமதா விஜயகாந்த், புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்து திமுகவுக்கு ஆதரவாகப் பேசி அமர்ந்தார்.
சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
''எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சியாக நினைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் செயல்படுவது வரவேற்புக்குரியது. முதல்வராக பதவியேற்றதும் 717 மதுக்கடைகளை மூடும் அறிவிப்பு, சிங்கப் பெண் பாதுகாப்புப் படை போன்றவை தமிழக மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
மீனவர்களை பாதுகாக்கும் அறிவிப்பு அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ளது. இதுவும் வரவேற்புக்குரியது. மக்களுக்கு முன்னுதாரணமான ஆட்சியாக இருக்கும் என்று கூறினீர்கள். எளிய குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதை முதல்வராக பதவியேற்றபோது பேசினீர்கள். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் முதன்மை கருத்து.
குதிரை பேரம் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் அத்தனை பேரும் கூறுகிறோம். இதுவரை தமிழக வரலாற்றில் நடக்காத சம்பவம். இது குறித்து பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதற்காக மனவேதனை அடைகிறேன்.
முதல்வரை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு சென்றார்கள் என்பதை விஜய் தெரியப்படுத்த வேண்டும்.
அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இன்று உங்களின் அரசியல் சிறப்பு அதிகாரியாக உங்கள் ராஜகுருவான ஜோதிடர் ரத்தன் பண்டிட்டை அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக குறிப்பிட கடமைப்பட்டிருக்கேன்.
உங்களுக்கு அவர் ராஜகுரு என்றால், தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு எதற்கு அரசுப் பதவி வழங்க வேண்டும்?. இளைஞர்கள் உங்களை நம்பி வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு இதன் மூலம் நீங்கள் என்ன கருத்தை முன்வைக்கிறீர்கள் என்பதைக் கூற வேண்டும்.
தவெக அரசு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மக்களுக்காக நேர்மையான ஆட்சியாக இருக்க வேண்டும். இந்த ஆட்சி நல்ல எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்'' என பிரேமலதா பேசினார்.
Summary
Horse-trading took place within the TVK why give a government post to an astrologer?" asks Premalatha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
முதல்வர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாா் இபிஎஸ்: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


