சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன் என்றும் முதல்வர் விஜய் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்முறையாக இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரேமலதாவுக்கு, விஜய்யும் எழுந்து நின்று வாழ்த்து கூறினார்.
இதன்பின்னர் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய பிரேமலதா,
"என்னுடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகவே நான் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அதன்படியே பேரவையில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவே நான் வாக்களிப்பேன்.
முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தம்பி விஜய்க்கு கேப்டன் சார்பாக, தேமுதிக சார்பாக வாழ்த்துகள். நேற்று தானே பதவியேற்றிருக்கிறார். கட்டாயம் அவருக்கான நேரத்தை நாம் தருவோம். அண்ணன் ஸ்டாலினும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு மக்கள் பிரச்னைகளை, தமிழ்நாட்டின் பிரச்னைகளைப் பற்றி பேசுவோம். தமிழகத்திற்காகவும் தமிழக மக்களுக்காகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
வரும் நாள்களில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பதைப் பார்த்து செயல்பாடுகள் இருக்கும்" என்றார்.
Summary
Chief Minister Vijay should be given time: Premalatha Vijayakanth
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்எல்ஏவாகப் பதவியேற்ற பிரேமலதா விஜயகாந்த்! எழுந்து நின்று வாழ்த்திய விஜய்!
எங்க வீட்டுப் பையன், அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்: பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
வாழ்க வசவாளர்கள்; அண்ணன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார்! பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


