தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஜெயலலிதா புகைப்படத்துடன் எம்எல்ஏவாகப் பொறுப்பேற்ற செங்கோட்டையன்!

ஜெயலலிதா புகைப்படத்துடன் செங்கோட்டையன் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டது பற்றி...

News image

ஜெயலலிதா புகைப்படத்துடன் செங்கோட்டையன் - TN assembly live

Updated On :11 மே 2026, 11:47 am IST

தவெக அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்துடன் எம்எல்ஏவாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று(மே 11) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்று வருகின்றனர்.

இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

முதலில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர்.

அதிமுகவில் இருந்து பிரிந்து விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தனது கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இம்முறை தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தவெக அமைச்சரவையிலும் இடமபெற்றுள்ளார்.

இதையடுத்து இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் எம்எல்ஏவாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்துடன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தவெகவில் இணைந்த பிறகும் செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்தையே வைத்திருக்கிறார். இதற்கு விஜய்யும் அனுமதி வழங்கியதாகவும் வேறெந்த தலைவரும் இவ்வாறு அனுமதி வாங்கமாட்டார்கள் என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது சட்டைப்பையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்திருந்தார்.

Summary

Sengottaiyan Assumes Office as MLA with Jayalalithaa Photo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.