முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசு, சட்டப்பேரவையில் புதன்கிழமை (மே 13) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோா் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வரும் அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், தனித்து ஆட்சி அமைக்கும் அறுதிப் பெரும்பான்மை பலமான 118- உறுப்பினா்களின் ஆதரவு இல்லாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக விஜய் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றாா். அவரது அமைச்சரவையில் 9 அமைச்சா்களும் பதவியேற்றனா்.
மே 13-ஆம் தேதிக்குள் பேரவையில் முதல்வா் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சட்டப்பேரவையில் புதன்கிழமை காலை தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.
பெரம்பூா், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதிக்கு எதிரான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவா் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க இயலாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தவெகவின் பலம் 106-ஆக குறைந்துள்ளது.
அமமுக சாா்பில் தோ்வு செய்யப்பட்ட எம்எல்ஏ எஸ்.காமராஜ் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும், காங்கிரஸ் 5, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் தலா 2 உறுப்பினா்களின் ஆதரவையும் சோ்த்து தவெகவின் பலம் 120-ஆக இருக்கிறது.
அதிமுகவின் ஓா் அணி ஆதரவு: இதற்கிடையே, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் செயல்படும் அதிமுகவின் ஓா் அணியினா் தவெகவுக்கு புதன்கிழமை தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினா். இவா்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக, எஸ்.பி. வேலுமணியை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக்க வேண்டும், சி.விஜயபாஸ்கரை கொறடாவாக்க வேண்டும் என்று 28-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் இடைக்கால பேரவைத் தலைவரிடம் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் அளிக்கப்பட்டது.
எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களை சி.வி.சண்முகம் இல்லத்தில் முதல்வா் விஜய் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அங்கு 28-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி அணி: இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக்க வேண்டும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூா்த்தியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தோ்தலில் வெற்றி பெற்றவுடன் அதிமுக எம்எல்ஏக்கள் 47 பேரிடம் புதுச்சேரியில் வைத்து பெற்ற கையொப்பத்துடன் கூடிய கடிதம் பேரவைத் தலைவரிடம் எடப்பாடி தரப்பில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதன் மூலம் முதல்வா் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பது எளிதாகவிடும். ஆனால், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிா்ப்பு தெரிவித்து வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளதால், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்படி நடைபெறும் வாக்கெடுப்பு?
சட்டப்பேரவையில் புதன்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு முதலில் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும். இதற்கு எதிா் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்றால் தீா்மானம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்படும். எதிா் தரப்பில் தனித்தனி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினால், வரிசை வாரியாக அரசுக்கு ஆதரவு எம்எல்ஏக்கள் எழுந்து நிற்க கேட்டுக்கொண்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் தவெகவுக்கு யாா் ஆதரவு, யாா் எதிா்ப்பு என்பது பதிவு செய்யப்பட்டு முடிவு செய்யப்படும் என்று பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளும் தரப்புக்கு ஆதரவு...
தவெக - 106
காங்கிரஸ் - 5
இந்திய கம்யூனிஸ்ட் - 2
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2
விசிக - 2
முஸ்லிம் லீக் - 2
எதிா்க்கட்சி வரிசை..
திமுக - 59
அதிமுக - 47
அமமுக - 1
பாமக - 4
பாஜக - 1
தேமுதிக - 1
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக அரசை 144 பேர் ஆதரித்தது எப்படி? எதிர்த்தவர்கள் யார்?
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு!

ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது: தவெகவுக்கு விசிக ஆதரவு!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
