தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு, முதல்முறையாக நேரலை செய்யப்படவுள்ளது.

News image

சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை செய்யப்படவுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மேற்கொள்ளும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலை செய்யப்படவுள்ளது.

தற்போது சட்டப்பேரவையில் 232 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், எனவே 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் பெரும்பான்மை கிடைத்துவிடும்.

திருச்சி கிழக்கில் விஜய் ராஜிநாமா செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் சட்டப்பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மூன்று வாக்குகளைத் தவிர்த்து, தவெகவில் 105 வாக்குகள் உள்ளன.

இதனிடையே அதிமுகவில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் பிரிந்த குழுவினர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர்.

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. காமராஜும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Assembly Confidence Vote Broadcast Live for the First Time

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.