குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று(மே 13) காலை முன்மொழியப்பட்ட நிலையில், அதன் மீது பேரவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.
அப்போது முதல்வர் விஜய் பேசுகையில்,
"தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்த்தும் பேசிய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் குறிப்பிட்டது போல எங்களுடைய அரசு மதச்சார்பற்ற அரசாகத்தான் செய்லபடும் என்று உறுதியளித்துக் கொள்கிறேன்.
பிரேமலதா கூறிய சில கருத்துகள் (குதிரை பேரம், ஜோதிடருக்கு அரசுப் பதவி) பற்றி நான் பரிசீலனை செய்கிறேன். அதேபோல சௌமியா அன்புமணி கூறியது பற்றியும் யோசிக்கிறேன்.
நாட்டு நலன், மக்களின் நலன், எங்களுடைய கொள்கைத் தலைவர்கள் எண்ணங்களை மனதில் வைத்து இந்த அரசு செயல்படும்.
முந்தைய அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல.
நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து இம்மியளவு விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும்" என்று பேசினார்.
Summary
Chief Minister Vijay speaks on the TVK government motion seeking a vote of confidence
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை நிகழ்வுகள் - முழுவிவரம்

நம்பிக்கை கோரும் தீர்மானம்! முன்மொழிந்த முதல்வர் விஜய்!

ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது: தவெகவுக்கு விசிக ஆதரவு!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
