முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று பேரவையில் முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதனால் விஜய் தலைமையிலான தவெக அரசு தொடர்கிறது.
முன்னதாக, தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களைச் செய்திருக்கிறார். அந்த திட்டங்களை எல்லாம் நீங்கள் தொடர வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டாம். மகளிர் உரிமைத் தொகைக்காக 1.31 கோடி தாய்மார்கள் காத்திருக்கின்றனர்.
அதேபோல கல்லூரி மாணவர்கள் புதுமைப்பெண் திட்ட நிதிக்காக 7 ஆம் தேதி முதல் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் நிலையில் காலை உணவுத் திட்டத்திற்காக பள்ளி மாணவர்கள் காத்திருக்கிறார்கள். இதுபோல பல்வேறு திட்ட பயனாளிகள் காத்திருக்கிறார்கள்.
விஜய் பதவியேற்றதும் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்று. கேட்டிருக்கிறார். ஆனால் மக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காதீர்கள்" என்று கூறினார். இதேபோல முந்தைய தலைவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் தொடர வேண்டும் என்று பலரும் பேசினர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் விஜய், "ஆதரவு தெரிவித்தவர்களுக்கான அரசு மட்டுமல்ல, எதிர்த்தவர்களுக்குமான அரசாகவும் இருக்கும்.
முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்ட நிதிகள் இம்மாதம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Schemes of Previous Governments Will Continue: CM Vijay Responds to Udhayanidhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்
சிறுபான்மை அரசுதான்; ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சி அரசாக இருக்கும்! முதல்வர் விஜய்
புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
