தவெக அரசு சிறுபான்மை அரசுதான் என்றும் ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சியைத் தரும் அரசாக இருக்கும் என்றும் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று(மே 13) காலை முன்மொழியப்பட்ட நிலையில், அதன் மீது பேரவை உறுப்பினர்கள் உரையாற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தவெக 144 வாக்குகள் ஆதரவுடன் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேறிய பின்னர் முதல்வர் விஜய் பேசுகையில்,
"நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், தனி அணியாக, மக்கள் அணியாக, மக்கள் விரும்பும் அணியாக களமிறமாகியது.
1967, 1977 தேர்தல்களைப் போலவே சாமானியர்களின் அரசையே அமைக்கும் என்று நாங்கள் தீர்மானமாகக் கூறினோம். அதன்படியே ஒரு விரல் புரட்சி விசில் புரட்சி ஆனது. இந்த அரசு சாமானியர்களின் அரசாக இருக்கும்.
தனிப்பெரும் கட்சியாக எங்களை மக்கள் சட்டப்பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தனிப்பெரும்பான்மை நூலிழையில் தவறிவிட்டது. பெரும்பான்மை இன்றி சிறுபான்மை என்று கூறினால் அதுவும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். எங்களுடைய அரசு சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசு.
பெண்கள் முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவருக்குமான அரசாக இருக்கும். கொள்கைத் தலைவர்கள் வழியில் மனசாட்சியுள்ள மக்களாட்சி அரசாக இருக்கும்.
சமூக நீதி, மதச்சார்பற்ற, சாதி - மதம் பாகுபாடு காட்டாத அரசாக இருக்கும். துணிச்சலுடன் செயல்படும் அரசாக இருக்கும்.
பதவிக்காக அதிகாரத்துக்காக அமைந்த அரசு அல்ல இது, மக்களுக்காக அமைக்கப்பட்ட அரசு" என்று பேசினார்.
Summary
CM joseph vijay speech in tn assembly after win in floor test
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதி

தவெகவுக்கு அதிமுக ஆதரவு! பதவிக்கு ஆசைப்படவில்லை! எஸ்.பி. வேலுமணி
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
