தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எஸ்.பி. வேலுமணி பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று(மே 13) காலை முன்மொழியப்பட்ட நிலையில், அதன் மீது பேரவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியில் இருந்து பிரிந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் அறிவிக்க, முதல்வர் விஜய்யும் நேற்று அவர்களைச் சந்தித்து ஆதரவை உறுதிப்படுத்தினார்.
அப்போது எஸ்.பி. வேலுமணி பேசுகையில்,
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்களின் உணர்வுகளை, எண்ணங்களை மதித்து முதல்வர் விஜய் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிக்கிறது. ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் கிடையாது. மக்கள் தீர்ப்பை மதித்து நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். திமுகவை எதிர்த்துதான் இதுவரை அரசியல் செய்திருக்கிறோம்.
பெரும்பான்மை மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தவெகவுக்கு எதிராக பேசினார். பின்னர் எஸ்.பி. வேலுமணி பேசத் தொடங்கியபோது அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவைத் தலைவர் அமைதிப்படுத்திய பின்னர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.
Summary
ADMK supports tvk govt on floor test: sp velumani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு! அதிமுகவின் 2 அணிகளால் பேரவையில் சலசலப்பு!
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

தவெகவுக்கு ஆதரவா? சி.வி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி ஆலோசனை! | ADMK | TVK

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


